• May 13 2024

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் பிரபல மலையாள நடிகை- அடடே இவர் கியூட்டானவராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவர் தற்பொழுது இயக்குநர் அகமது இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குநர் ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார். இது தவிர இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில்'சைரன்' என்னும் படத்திலும் நடித்து  வருகின்றார்.

சைரன் திரைப்படம் இவருடைய 31-வது படம் என்பதோடு இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. 


இந்நிலையில் 'சைரன்' படத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் இதற்கு முன்னாள் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான 'தள்ளிபோகாதே' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன்', ஜன கன மன, அகிலன் உள்ளிட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் வருகிற 30-ஆம் தேதியும் அகிலன் வருகிற 15-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement