• Nov 06 2024

ஏற்கனவே திருமணமான நடிகரை திருமணம் செய்த பிரபல நடிகை? தீயாய் பரவும் வெட்டிங் வீடியோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் சிம்பு நடித்த மாநாடு படத்தில் நடித்திருப்பார். அதன் மூலம் பட்டித்தொட்டி எங்குமே புகழ் பெற்றார் .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்  கல்யாணி பிரியதர்ஷன். இவர் தனக்கேற்ற சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். கல்யாணி பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசினின் மகளாவார். இவர் ஹலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்த நிலையில், பிரபல நடிகையாக காணப்படும் கல்யாணிக்கும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீராமுக்கும் ரகசியமாக திருமணம் ஆகி விட்டது என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு அதனை உறுதி செய்யும் வகையில் வீடியோ ஒன்றும் இணையத்தில் பரவி வருகின்றது.


இந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் வீடியோவும் வேகமாக பரவி வருவதால் அதிர்ச்சியின் உச்சநிலைக்கு சென்றுள்ளார்கள். இதனால் சோகமான ஸ்டேட்டஸ்களை தமது சமூக வலைதள பக்கங்களில் வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

எனினும் குறித்த வீடியோ விளம்பரத்திற்காக படமாக்கப்பட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. 'ஜெஸ் பாரத் வெட்டிங் கலெக்சன்' என்றொரு நகைக்கடையின் விளம்பரத்திலேயே இருவரும் இணைத்துள்ளார்கள். அதற்காகத்தான் இந்த திருமண சூட்டிங் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சின்னத்திரை நடிகர் ஸ்ரீராம் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனால் தற்போது கல்யாணி பிரியதர்ஷனை அவர் திருமணம் செய்ததாக பரவிய வீடியோ ரசிகர்களை கொஞ்சம் கொந்தளிக்க வைத்துள்ளது. அதற்குப் பிறகு உண்மையை தெரிந்த ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளார்கள்.


Advertisement

Advertisement