• May 04 2024

குயின்ஷியை அந்த இடத்தில் கடித்த அசல்... காமவெறி பிடித்தவனை வெளியேற்றுங்கள்... வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனானது ஆரம்பமாகி தற்போது 3ஆவது வாரத்தை கடக்க உள்ளது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் அசல் கோளாறு. பிரபல கானாப் பாடகரான இவர் பல்வேறு மேடை கச்சேரிகளில் பங்கேற்று பாடல்களை பாடி வருகிறார். 


தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இவர் அங்குள்ள சக பெண் போட்டியாளர்களிடம் சில்மிஷம் செய்வதில் எல்லை மீறி நடந்து கொள்கிறார்.

அதாவது எப்போதும் பெண் போட்டியாளர்களை சுற்றி சுற்றி வரும் அசல் கோளாறு, அவர்களின் கைகள், கால்கள், முதுகு, கன்னம் என வெளிப்படும் இடங்களையெல்லாம் தடவுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். 


அதுமட்டுமல்லாது அவர்களின் அருகில் ஒட்டி உரசி அமர்வது, மடியில் படுப்பது என தன்னுடைய ஆசைகளை தீர்த்தும் வருகிறார். அதிலும் குறிப்பாக ரச்சிதா, மகேஸ்வரி, மைனா, ஜனனி, குயின்ஸி, நிவாஷினி, ஆயிஷா, ஜனனி என இவர் யாரையும் விட்டு வைப்பதில்லை. மசாஜ் செய்துவிடுகிறேன் என எல்லாப் பெண் போட்டியாளர்களையும் தொடுவதை அந்நிகழ்ச்சியில் வாடிக்கையாக கொண்டுள்ளார் அசல்.

சமீபத்தில் நிவாஷினியை கட்டிப்பிடித்த போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் அசல் கோளாறை உடனடியாக வெளியேற்றறு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


இதனைத் தொடர்ந்தும் நேற்று நிவாஷினியின் தோள் பட்டை மற்றும் கைகளை பிடித்து கடித்து வைத்தார் அசல் கோளாறு. அந்த வீடியோவை பார்த்து பலரும் காறித் துப்பாத குறையாக திட்டி வருகின்றனர்.

அத்தோடு காம வெறி பிடித்து பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறும் அசல் கோளாறை வெளியேற்ற வேண்டும் எனக் கூறி சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிவாஷினியைத் தொடர்ந்து தற்போது குயின்ஸியிடமும் அத்துமீறியுள்ளார் அசல் கோளாறு. அதாவது கிச்சன் ஏரியாவில் நின்று கொண்டிருக்கும் குயின்ஸியின் அருகில் பூனை போல் சென்று கடிக்கிறார். இதனால் ஷாக்காகும் குயின்ஸி அசலை திட்டி விட்டு ஒதுங்கி கொள்கிறார். 


இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் "எங்கேடா கடிக்கிறாய்? இதற்காகதான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தியா" என்று கேட்டு திட்டித் தீர்த்து விளாசி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement