• May 11 2024

என்னம்மா லாஸ்லியா இப்படி பன்றீங்களே-புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாகத் திகழ்பவர் நடிகை லாஸ்லியா மரியநேசன். இலங்கையைச் சேர்ந்த இவர் 2015-ஆம் ஆண்டு தொடக்கம் 2019-ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சியின் சீசன் 3 இல் போட்டியாளராக பங்குபற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலம் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டார்.

மேலும் இவர் 2020-ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த 'பிரண்ட்ஷிப்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். இத்திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து அடுத்ததாக கூகுள் குட்டப்பா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். எனினும் இதுமட்டுமின்றி தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.படங்கள் மட்டுமின்றி அவ்வப்போது விளம்பரங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் லாஸ்லியா.

இவ்வாறுஇருக்கையில்  தொடர்ந்து ரசிகர்களுடன் இணைந்தே இருக்க அவ்வப்போது தனது புகைப்படங்களை அவரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் லாஸ்லியா.

அதன்படி தற்போது காலை வாழ்த்து தெரிவித்து யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் லாஸ்லியா.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்   




Advertisement

Advertisement

Advertisement