• May 06 2024

ஐஸ்வர்யா ராய் கூட நான் நடிச்சது பாத்து வீட்ல எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க- பொன்னியின் செல்வன் ராகவன் கொடுத்த இன்டர்வியூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குழந்தை நட்சத்திர நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் ராகவ். இப்படத்தில் மாலாக்கா ஐ லவ்யூ என்று சொல்லியே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

இது தவிர இன்னும் சில திரைப்படங்களில் நடித்த இவர் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.


அதில் பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தில் ஐஸ்வர்யா மாம் கூட பேசியிருக்கிறேன். அவங்க ரொம்ப அமைதியாக இருப்பாங்க முதலில் வந்ததுமே தமிழில் இருந்தத எல்லாத்தையுமே ஹிந்தியில் தான் எழுதினாங்க. ஹிந்தில எழுதிட்டு தான் அதை பற்றி படிப்பாங்க.ட்ரெய்லர்ல என்னை காட்டுவாங்க என்று தெரியும். ஆனால் இந்த அளவுக்கு ரெஸ்போன்ஸ் கிடைக்கும் என்று நினைக்கல.


இவங்களை தவிர கிசோர் அங்கிளை பார்த்தேன். அவர் மாலாக்கா எப்பிடி இருக்கிறாங்க என்று நக்கலாகக் கேட்டாரு. மேலும் எனக்கு விஜய் சேர் கூட நடிக்கிறது ரொம்ப பிடிக்கும்அவரோட பிக்பாஃன் நான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement