• May 05 2024

எருமை சாணி விஜய் திருமணம்.. வெளியான க்யூட் புகைப்படங்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் இன்று நடந்துள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.


எருமை சாணி என்ற யூடியூப் சேனல் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக கொரோனா ஊரடங்கு நேரத்தில் இந்த சேனலில் பதிவான வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


யூடியூப் மூலம் பிரபலமான விஜய், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ ’நான் சிரித்தால்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.எனினும்  அதுமட்டுமின்றி அருள்நிதி நடித்த ’டி பிளாக்’ என்ற படத்தை இயக்கிய இவர், அந்த படத்தில் அருள்நிதியின் நண்பராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறுஇருக்கையில் எருமை சாணி விஜய், நட்சத்திரா என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் இருதரப்பு பெற்றோர் முன்னிலையில் சமீபத்தில் நடந்துள்ளது. 


இந்த நிலையில் இன்று இவர்களது திருமணம் நடந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்களை விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனினும் இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் மனைவியான நட்சத்திரா மாடல் மற்றும் பேஷன் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement