• May 19 2024

வாரிசு படத்தில் இணைந்த சினேகா மற்றும் மீனா- இதுவரை யாரும் எதிர்பார்க்காத செம டுவிஸ்ட்- அப்போ படம் வேற லெவலில் இருக்க போகுது

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு இயக்குநர் வம்சி  இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு சமீபத்தில் உறுதி செய்தது.


 மேலும் இப்படம குறித்து இயக்குநர் வம்சி "இது பக்கா தமிழ் படம். தோழா படம் பண்ணும்போது இரண்டு மொழிகளில் எடுத்தேன்.ஆனால், வாரிசு படம் முழுக்க தமிழ் விருந்து." என்று குறிப்பிட்டார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்கும் பிரபலங்களில் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் மீனா சினேகா ஆகியோரும் இருக்கின்றனர். அத்தோடு இப்புகைப்படத்திற்கு கேப்ஷனாக வாரிசு டீம் என்று போடப்பட்டுள்ளது. இதனால் இவர்களும் வாரிசு படத்தில் நடித்துள்ளனரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது .ஆனால் அது சங்கீதாவின் பிறந்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement