• May 11 2024

எந்த பரிசும் வேண்டாம்- இரண்டாவது திருமணம் குறித்து பதிவிட்ட சாண்டியின் முதல் மனைவி- யார் மாப்பிள்ளை தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில்  தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 



நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். மேலும் இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார்



அத்தோடு சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை ,கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.இதனைத் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குநரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார்.


எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை காஜல் இப்போது ஒரு பதிவு ஒன்றை  போட்டுள்ளார். அதில், அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம், இது சிறிய பார்ட்டி, சிலர் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.


எந்த பரிசும் வேண்டாம், ஆனால் நான் திருமணம் செய்துகொள்ள மட்டும் யாரையாவது அழைத்து வாருங்கள் என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement