• May 04 2024

லூசு மாதிரி பேசாதீங்க.. திடீரென கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகேஸ்வரி, தனலட்சுமி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 அதிகளவான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது 'பிக்பாஸ்' தான். இதனை  கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது ஆரம்பமாகி இருக்கின்றது. இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் அமுதவாணன், ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி, ஆயீஷா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டு அசத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதில் சமையல் அறையில் மீண்டும் சண்டை வெடித்துள்ளது. இதில், சாம்பார் ஏன் இப்போது சமைக்கிறீர்கள் என்று மகேஸ்வரியை பார்த்து தனலட்சுமி கேட்க, அதற்க்கு மகேஸ்வரி லூசு மாதிரி பேசாதீங்க, அது சமையல் அணியின் விருப்பம் என்று சொல்கிறார்.

இதற்க்கு பதில் பேசிய தனலட்சுமி நீங்க லூசு மாதிரி பேசாதீங்க என்று கூற அவர்கள் இருவருக்கு இடையான வாக்குவாதம் கடுமையாக நடக்கிறது.

மேலும் இந்த வாக்குவாதம் எங்கு போய் முடிகிறது என்று எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement