• May 18 2024

வெளியான 'ராம் சேது' படத்தின் டிரைலர்... சர்ச்சையில் சிக்கும் எனக் கூறி வரும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அக்‌ஷய் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்தன. இதனால் அவரது மார்க்கெட்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் 'ராம் சேது'. 


இப்படத்தின் மூலம் சினிமாவில் அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு 7000 வருடத்திற்கு முன் ராமரால் கடலுக்கு நடுவே கட்டப்பட்டதாக கூறப்படும் ராமர் பாலத்தை பற்றி தான் இப்படத்தை எடுத்துள்ளனர். அந்த பாலத்தை தேடிச் செல்லும் ஹீரோ அக்‌ஷய் குமார் அதில் வெற்றிகண்டாரா என்பது தான் இப்படத்தின் மையக்கரு. 


அபிஷேக் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார். மேலும் 'ராம் சேது' என்ற இத்திரைப்படம் தமிழில் 'ராமர் பாலம்' என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. 


மேலும் வருகிற அக்டோபர் 25-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் ஆனது தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்நிலையில் இப்படத்தின் கதையை மையமாக வைத்துப் பார்க்கும் போது இப்படம் ரிலீசான பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்குது என்று.

Advertisement

Advertisement