• May 05 2024

லெஜண்ட் சரவணன் இத்தனை கோடி மதிப்புள்ள கார் வைத்திருக்கிறாரா.... தொழிலதிபர் சரவணனின் சொத்துமதிப்பு விபரம்....

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான தொழிலதிபர் சரவணன். தனது முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டு இருந்தார். இவரின் சொத்துமதிப்பு பற்றி தெரிந்து கொள்ளவோம்.


தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்து தன்னை ஹீரோவாக அறிமுகம் ஆக்கிக்கொண்ட  சரவணன் , நடிகர் மட்டும்  இல்லை இவர் சிறந்த தொழிலதிபர் . இவர் நடித்த முதல் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சமீபத்தில் கூறியுள்ளார். அதற்கான பணிகள் தான் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படத்தை இயக்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில், நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணனின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 6000 கோடி இருக்குமாம்.ஒரு நாளைக்கு மட்டுமே தனது தொழில் மூலம் ரூ. 1.5 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம் லெஜண்ட் சரவணன்.


மேலும்  ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத், லம்போர்கினி ஹுராகன், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் உட்பட பல கோடி மதிப்புள்ள பல கார்களை வைத்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement