• Dec 01 2022

நடிகர் விமலுக்கு மகள் இருக்கா..இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விமல். இவர் நடிப்பில் வெளியான பசங்க, களவாணி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக கன்னிராசி என்ற படம் திரைக்கு வந்தது. இந்தப் படம் சுமாரான வரவேற்பையே ரசிகர்களிடம் பெற்றது.அவர் சமீப காலமாக சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

இருப்பினும் அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்தோடு விமலுக்கு பாராட்டுகளும் குவிந்தது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது விமல் அவரது மகள் ஆத்விகா உடன் விமானத்தில் சென்று புகைப்படங்களை  வெளியிட்டு இருக்கிறார்.

"யாழினும் இனிய என் மகளுடன் தனித்துப் பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ?" என அவர் தெரிவித்து புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார்.