• Mar 29 2024

பிக்பாஸ் ராமின் அம்மா அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கமல்ஹாசன் வந்திருந்த எபிசோடு பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.இதற்கு மிக முக்கிய காரணம், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்த பிரச்சனைகள் தான்.

பொம்மை டாஸ்க் என்ற பெயரில்,போட்டியாளர்களுக்கு இடையில் மாறி மாறி விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தது. வார இறுதியில் வந்த கமல், தனலட்சுமி ஷெரினாவை தள்ளி விடவில்லை என்பதை குறும்படம் போட்டு காண்பித்திருந்தார். அது மட்டுமில்லாமல், பலரிடமும் அதிகம் சண்டை போட்டு வந்த அசீமையும் கடுமையாக விமர்சித்திருந்தார். 


அத்தோடு இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அசல் தான் வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் ராம். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் என்பதும் முக்கியமாகும்


இதுவரை சிறப்பாக விளையாடி வரும் இவர் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது ராம் தனது குடும்பத்துடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்


Advertisement

Advertisement

Advertisement