• Jan 18 2025

விஜயகுமாரின் இரண்டாவது மகள் ஸ்ரீதேவி தமிழில் நடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?- இதுவரை வெளிவராத ரகசியங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் ஸ்ரீதேவி. இவர் பிரபல நடிகராக விஜயகுமார் மற்றும் மஞ்சுலாவின் இரண்டாவது மகளும் ஆவார்.இந்த நிலையில் இவர் குறித்து தான் பார்க்கலாம் வாங்க.

1986 அக்டோபர் மாதம் 29 ம் தேதி பிறந்திருக்கின்றார். றிக்சா மாமா என்னும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து அம்மா வந்தாச்சு, சுகமான சுமைகள், ஆவாரம்பூ என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். மேலும் கதாநாயகியாக முதல்  தெலுங்கு சினிமாவிலேயே அறிமுகமாகினார்.


அதன்படி ருக்மணி என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின்னர் பிரபாஸுடன் இணைந்து ஈஸ்வர் என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தினைத் தொடர்ந்து இதன் பின்னர் காதல் வைரஸ் என்னும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தினை அடுத்து மாதவனுடன் இணைந்து பிரியமான தோழி படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் தித்திக்குதே தேவதையைக் கண்டேன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து கன்னடம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருந்தார். மேலும்  தேவதையைக் கண்டேன் திரைப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்ததால் இப்படத்திற்குப் பின்னர் இவருக்கு வாய்ப்புக்களே கிடைக்கவில்லை எனலாம்.


இதனால் 2009ம் ஆண்டு ராகுல் என்பவரைத் திருமணம் செய்து செட்டில் ஆகினார். இவருக்கு 2016ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பின்னர் மொத்தமாக சினிமாவை விட்டு விலகிய இவர் தற்பொழுது மீண்டும் தெலுங்கு சின்னத்தரை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றார். ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் இன்னும் நடிக்காமல் இருக்கின்றார். தேவதையைக் கண்டேன் திரைப்படத்திற்குப் பிறகு எழுந்த நெக்கட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்ததால் தான் தமிழில் வாழ்ப்புக்களை தவிர்த்து வருகின்றாரா? என்றும் ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement