• May 04 2024

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் யார் தெரியுமா?- இது என்ன புது சஸ்பென்ஸாக இருக்கே

stella / 7 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் தான் விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தும் தான் இயக்குநராகத் தான் வருவேன் என கூறியிருந்தார். அதன்படி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார்.



இதனால் இவர் தன்னுடைய முதல் படத்தில் எந்த கதாநாயகனை வைத்து படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.


இந்நிலையில், தற்போதைக்கு அவருடைய லிஸ்டில் கவின், ஹரிஸ் கல்யாண், அதர்வா உள்ளிட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. 'டாடா' படத்தின் வெற்றிக்கு பின்பு கவினின் மார்கெட் எங்கயோ சென்று விட்டது. 


இதனையடுத்து அவரின் அடுத்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஹரிஸ் கல்யாணும் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.அதர்வா ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற காத்திருப்பில் இருக்கிறார். இவர்களின் யாரை ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தில் இயக்க போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement