• Dec 02 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த வாரம், பூகம்பம் என்கிற டாஸ்க் நடத்தப்பட்டு, அதில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் கடைசி இரண்டு இடங்களை பிடித்த போட்டியாளர்களான அக்ஷயா மற்றும் ப்ராவோ ஆகியோர் வெளியேற்றப்பட்டதோடு, அனன்யா ராவ், மற்றும் விஜய் வர்மா ஆகியோர் உள்ளே வந்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள்  தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றது.மேலும் இன்றைய புரோமோவில் கூட தன்னை பெஸ்ட் என காட்டிக்கொள்ள மற்றவர்களை ஒஸ்ட் என பிரதிபலிக்கிறார்கள். 


வஞ்ச புகழ்ச்சியா என்றால் வெறும் வஞ்சம் தான் செய்கிறார்கள் என போட்டியாளர்களை வெளுத்து வாங்க தயாராகியுள்ளதை நிரூபித்தார்.இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

அந்த வகையில் இந்த வாரம் ஜோவிகா வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement