• May 05 2024

ரசிகர்கள் Vibe-க்கு மத்தியில் லியோ படத்தைப் பார்க்கச் சென்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள இரண்டாவது திரைப்படம் லியோ. அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் விஜய் உடன் திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. 


தமிழகத்தில் 9 மணிக்கு தான் லியோ முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டாலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே லியோ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கு படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை தங்களது எக்ஸ் தள பக்கங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். 


அத்தோடு படம் எல்சியூ தான் என்பதும் உறுதியாகி விட்டது. இப்படியான நிலையில் இந்தப் படத்தைப் பார்க்க கீர்த்தி சுரேஷ், நடிகர் வைவப், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், அனிரூத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் என பல பிரபலங்கள் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement