• May 04 2024

அடிபட்டு கீழே விழுந்த எழிலின் தந்தை... நடந்து முடிந்த ஆர்த்தியின் கல்யாணம்... இறுதியில் தாலி காட்டியது யார் தெரியுமா..?- Kayal serial promo..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் வடிவும், எழிலின் தந்தையும் சண்டை போடுகின்றனர். அப்போது எழிலின் தந்தை அடிபட்டு கீழே விழுகின்றார்.


மறுபுறம் ஆர்த்திக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது மணமேடையில் எழிலிற்குப் பதிலாக மண மேடையில் அவரின் நண்பர் ஆனந்த் இருக்கின்றார். அதை பார்த்ததும் ஐயர் மாப்பிள்ளை அவர் தானே எனக் கேட்கின்றார்.


பதிலுக்கு ஆனந்த் மாப்பிள்ளை மாறிப்போச்சு மந்திரத்தை சொல்லுங்கோ என்கிறார். பின்னர் ஐயர் மந்திரந்தை சொல்ல ஆனந்த் ஆர்த்தியின் கழுத்தில் தாலி காட்டுகின்றார். இதனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement