• Feb 14 2026

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? விஜய் ரசிகர்களுக்கு அதகள அப்டேட்

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் இறுதிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் திகதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. 

இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்சார் சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  ஆனாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால் ஜனநாயகன் பட வெளியீடு மேலும்  ஒத்திவைக்கப்பட்டது. 


அதன் பின்பு சென்சார் போர்டு பரிந்துரைத்த மாற்றங்களை செய்யப்படக் குழு ஒப்பு கொண்டதாகவும்,  படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் கூறப்பட்டது.  ஆனாலும் படக்குழுவுடன் தொடர்புடையவர்கள் இந்த தகவலை மறுத்துள்ளனர். 

அதன்படி  அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் எதிர்வரும் 20ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த தகவல் ஜனநாயகன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு  உற்சாகத்தை கொடுத்துள்ளது. 


Advertisement

Advertisement