• May 13 2024

முக்கிய நடிகர்களின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'மாமன்னன்' இசை வெளியீட்டு விழா.. எப்போ தெரியுமா... வெளியானது அறிவிப்பு..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தற்போது 'மாமன்னன்' திரைப்படம் தயாராகி வருகின்றது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


அத்தோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் வடிவேலு பாடிய 'ராசாக்கண்ணு..' பாடல் வெளியாகி செம ட்ரெண்ட் ஆனது.

இதனையடுத்து தற்போது மற்றுமோர் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது மாமன்னன் இசை வெளியீட்டு விழாவை ஜூன் 1ஆம் (நாளை மறுநாள்) தேதி நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


அதுமட்டுமல்லாது உதயநிதி திரைப்பயணத்தில் இதுதான் கடைசிப் படம் என்பதால் இதனை பிரமாண்டமாக நடத்த உதயநிதி முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு இந்நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement