• May 04 2024

’ஏகே 61’ படத்தின் ஹாங்காங் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?- லேட்டஸ்டாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலமம் வரும் அஜித் தற்பொழுது  ’ஏகே 61’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியார் கமிட்டாகியுள்ளார்.

மேலும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பானது டி செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் ஹாங்காங் நாட்டில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு முன்னரே ஒரு சில தொழில்நுட்ப பணிகள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது 


எச் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே 62 படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நடிகை நயன்தாரா தான் கதாநாயகியாக நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement