• May 09 2024

தனுஷின் திருச்சிற்றம்பலம் எப்போது ரிலீஸ் தெரியுமா..? ரசிகர்களுக்கு செமரீட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகின்றார்.இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது இயக்குநர் ,தயாரிப்பாளர், பாடகர் ,பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

முதல் படத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதைப்பற்றி கவலைப்படாது நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். எனினும் அதன் பலனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன், படிக்காதவன், ஆடுகளம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உச்சத்தை தொட்டுள்ளார்.

மாறன் படத்திற்கு பின்னர் இவருடைய நடிப்பில் தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடவுள்ள இருக்கும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement