• May 04 2024

விக்ரம் படத்தின் ரோலெக்ஸ் கதாப்பாத்திரம் குறித்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா?- அடடே இப்படியா சொல்லி இருக்கிறார்?

stella / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. அங்கே ஏற்கனவே லியோ புதிய சாதனையைப் படைத்துவிட்டது. இப்படியான நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.


இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜிடம் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்? ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து எதுவும் பேசினாரா என்று தொகுப்பாளர் கேட்டார்.


பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், சூப்பர் ரா இருந்து என்று சொன்னார். சூர்யா ரோலக்ஸ் காதாபாத்திரத்தில் நடித்திருந்த விதம் அருமையாக இருந்தது என விஜய் சொன்னதாக கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள், அப்போ லியோ LCU தான் இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் லியோ படத்திலும் சூர்யா வந்தால் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement