• Apr 27 2024

அழகின் மொத்தம் நீயா,கண்கொள்ளா காட்சியா இருக்கே!- நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்திலும் தங்கையாக நடித்திருந்தார்.


கடந்த ஆண்டு செல்வராகவனுடன் இணைந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் போல்டாக நடித்திருந்தார். இப்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.


தமிழில் நடிகர் விஜயின் அட்மின் ஆன ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா என்னும் தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது ஒரு திருமண விழாவிற்கு செம ஸ்டைலாக சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement