• May 03 2024

விக்ரம் படம் ஓடிடியில் வெளியானதால் குக்வித் கோமாளி புகழ் என்ன செய்துள்ளார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். முக்கிய கதாப்பாத்திரத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 400 கோடி க்கு மேல் வசூல் சாதனை செய்து விட்டது.

கமலின் தீவிர ரசிகன் என்று வெறும் வார்த்தையினால் மட்டும் சொல்லாது கடுமையாக முயற்சி செய்து இப்படத்தை எடுத்துள்ளார். அதன்படி இந்தப் படத்தை ஒரு மாதம் கடந்தும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே படத்தை பல முறை பார்த்தவர்களும், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை பார்க்க முடியாதவர்களும் தற்போது இந்த ஓடிடி ரிலீசை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிமூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் புகழ் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீசை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தகிட தத்தித்தோம் என்று விக்ரம் படத்தை பாடி தனது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றார். இவரைப்போல பிரபலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீசை தற்போது கொண்டாட்டத்துடன் எதிர்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை வெளியிடவுள்ள நடிகர் யார் தெரியுமா?- அட இது நம்ப லிஸ்ட்லிலையே இல்லையே

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement