• Apr 20 2024

யோகி பாபுவின் 'பன்னிக்குட்டி' படத்தின் புதிய அப்டேட்டுகள்….திரும்பத் திரும்ப பார்க்கணும் போல இருக்கே

Prema / 1 year ago

Advertisement

Listen News!

எந்தக் கவலையில் இருந்தாலும் இவரின் படம் பார்த்தால் அத்தனை கவலையும் பறந்து விடும் என்று கூறுமளவிற்கு மக்கள் மனதில் இடத்தில் இடம் பிடித்தவர் நடிகர் யோகி பாபு. இன்றைய காலகட்டத்தில் யோகி பாபு இல்லாமல் படங்கள் இல்லை என்னும் அளவிற்கு எந்தப் படம் வந்தாலும் அதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஒருவராக யோகி பாபு கட்டாயம் இடம்பெற்று வருகின்றார்.

இந்தநிலையில் இவரின் நடிப்பில் நீண்டகால படப்பிடிப்பில் இருந்த படம் தான் 'பன்னிக்குட்டி'. இந்த படத்தில் இவருடன் இணைந்து கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பன்றி குட்டியை சுற்றி நிகழும் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்தப் படம் கிருமி புகழ் அனுசரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இதில் திரைப்பிரபலங்களான திண்டுக்கல் லியோனி, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சிங்கம் புலி உட்பட மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'பன்னிக்குட்டி' படத்தின் படப்பிடிப்புக்கள் 2019-ஆம் ஆண்டு முடிந்து விட்ட நிலையிலும் இதன் ரிலீஸ் செய்தியோ அல்லது ட்ரைலர், ஆடியோ குறித்தோ எந்த தகவலும் இதுவரை காலமும் இல்லாமல் இருந்தது. பின்னர் 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. ட்ரைலர் வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த படத்தின் டிரைலரில் படம் முழுவதும் ஒரு பன்றியை நாயகர்கள் விரட்டுவது போன்ற காட்சியும் ஒரு பன்றி குட்டிக்காக அடித்துக் கொள்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. 90 வினாடிகளை உள்ளடக்கிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஒரு பன்றி குட்டியை பிடிக்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை குறிப்பாக படம் பிடித்து காட்டியிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரியளவில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement