• May 09 2024

'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் பெயர் என்ன தெரியுமா... வெளியிட்ட படக்குழு... பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 'ஜெயிலர்' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. அந்தவகையில் 'கோலமாவு கோகிலா, டாக்டர்' மற்றும் விஜய்யின் 'பீஸ்ட்' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் இந்தப் படத்தையும் இயக்கி வருகிறார். 


மேலும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாது மலையாள நடிகர் விநாயகன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ராக்கி பட ஹீரோ வஸந்த்ரவி ஆகியோரும் இவர்களோடு இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு சிறந்த முறையில் இசையமைத்து வருகிறார்.


இப்படத்தின் உடைய ஷூட்டிங் நிகழ்வுகள் யாவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங்கை விரைவில் முடித்து வருகிற 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். 


இந்நிலையில் இன்றைய தினம் ரஜினிகாந்த் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றார். இதனால் இன்று ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் 'முத்துவேல் பாண்டியன்' என்கிற கேரக்டரில் நடித்து வருவதாக குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 


அதுமட்டுமல்லாமல் அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து, பலத்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement