• Apr 30 2024

ஷாருக்கானின் பதான் திரைப்படம் பெற்ற மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் தற்பொழுது இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார். அத்தோடு இப்படத்தின் ஷுட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் பதான்.சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். இவர்களுடன் ஜான் ஆபிரகாம் என பலர் நடித்திருந்தார்கள். படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களையும், வசூல் வேட்டையும் நடத்தி வந்தது.


ரூ. 225 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. நல்ல வசூல் வேட்டை செய்து மிகப்பெரிய ஹிட் படமாக அமைய இப்படத்திற்காக ஷாருக்கான் ரூ. 200 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.


நீண்ட இடைவேளைக்கு பிறகு செம ஹிட்டடித்த ஹிந்தி படமும் இதுவே ஆகும். இதனால் அடுத்த படமான ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது எனலாம்.

Advertisement

Advertisement

Advertisement