• Jan 19 2025

எவ்வளவு உடை குறைத்தும் வாய்ப்பு கிடைக்கல.. இனி டாப்லெஸ் தான்.. அதிர்ச்சி முடிவெடுத்த பிக்பாஸ் நடிகை..

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்தும் தனக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பி வருவதாக தெரிகிறது. 

தமிழ் சினிமாவில் ’வேலையில்லா பட்டதாரி 2’ என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன். இந்த படத்தின் வில்லியான கஜோல் உதவியாளராக அவர் நடித்திருந்த நிலையில் அதனை அடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் கிடைத்த பிரபலம் காரணமாக அவருக்கு ’பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

பிக்பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வெற்றி பெற்றது என்பதும் ரைசா வின்சனுக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு கூட அவர் நான்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் அந்த படங்களின்  படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றாலும் அவை இன்னும் வளராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ஒரு ஹிட் படத்தில் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக அவர் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் எந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் தன்னை கண்டுகொள்ளவில்லை என்பது அவருக்கு பெரும் அதிருப்தியாக உள்ளது. எனவே இனி அதிரடியாக அடுத்த கட்டமாக கிளாமர் இன்னும் தூக்கலாக பதிவு செய்ய முடிவு செய்து விட்டதாகவும் தேவைப்பட்டால் டாப்லெஸ் போஸ் கூட கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 

சினிமாவில் வாய்ப்பு கிடைக்க எந்த எல்லைக்கும் தயார் என்ற முடிவை ரைசா வில்சன் எடுத்திருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு அவருடைய முடிவால் இன்ப அதிர்ச்சி கிடைக்க வாய்ப்பு இருக்கின்றதாம்.


Advertisement

Advertisement