• May 05 2024

அஜித் வெளிநாடுகளிலிருந்து ஆடர் செய்திருக்கும் பைக்குகளின் விலை என்ன தெரியுமா?- இத்தனை கோடியா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகின்றார். அததோடு இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் புனேயில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது.

 படத்தில் வேறு யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் கதை இறுதி வடிவம் பெறுவதற்கு கால தாமதம் ஆனதால் பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை தொடங்கினார். தனது முதல்கட்ட பயணத்தை நேபாளம், பூடான், திபெத் உள்ளிட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்டார். 


அண்மையில் தனது பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அதனையடுத்து வரும் நவம்பர் மாதத்திலிருந்து இரண்டாம் கட்ட பயணத்தை ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அஜித் ஏகே மோட்டோ ரைடு என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் பைக் ரைடு பிரியர்கள் அஜித்தின் நிறுவனத்தில் வாடகைக்கு பைக்குகளை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் சென்று வரலாம்.

 இந்நிலையில் தனது நிறுவனத்துக்காக அஜித் வெளிநாடுகளில் இருந்து பத்து பைக்குகளை ஆர்டர் செய்திருக்கிறாராம்.அஜித் ஆர்டர் செய்திருக்கும் ஒவ்வொரு பைக்கின் விலையும் சராசரியாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனைக் கேட்ட பலரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்திருக்கின்றனர். அதேபோல் அந்த பைக்குகளுக்கு வாடகையாக 8 லட்சம் ரூபாய்வரை அஜித் வசூலிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இதற்கிடையே சமீபத்தில் தனது சக ரைடருக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை அஜித் பரிசளித்துள்ளார்.முன்னதாக ஏகே மோட்டோ ரைடு குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், " ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)" என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்" என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement