• May 07 2024

தெலுங்கில் வெளியாகும் டான் திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா?- இன்று வெளியாகவுள்ள ட்ரெய்லர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகராக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படம் 13ம் திகதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.

இந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயனின் காமெடி காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் என்பன அதிகமாக உள்ளன . அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியஙடகா மோகன் நடித்துள்ளார். அதே போல வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் டான் படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தெலுங்கு படத்துக்கு ‘காலேஜ் டான்’ என பெயர் வைத்து மே 13 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது.

மேலும் இன்று தெலுங்கு வெர்ஷனின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷிடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement