• May 04 2024

படுதோல்வியடைந்த விஜய்யின் 'புலி' படம்... எவ்வளவு வசூலை பெற்றிருக்கின்றது தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனங்கவர்ந்த வெற்றி நாயகனாக பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் மிக பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. சினிமாவில் எப்போதுமே ஓய்வில்லாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 



ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. 'வாரிசு' படத்தை முடித்தகையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கூறியுள்ளார். தளபதி விஜய் படம் என்றாலே எப்போதும் மாஸாக இருக்கும். அதுமட்டுமன்றி ஒரு சில படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு தோல்வியையும் தழுவி இருக்கின்றன.



அவ்வாறாக விஜய் நடிப்பில் உருவாகி மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்து படுதோல்வியடைந்த திரைப்படங்களில் ஒன்று புலி. 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் நெருங்கிய நண்பரான பி டி செல்வகுமார் தயாரித்திருந்தார்.இப்படத்தில் பிரபு, ஸ்ரீதேவி, ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், நந்திதா, தம்பி ராமையா, கருணாஸ், சுதீப் எனப் பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். அத்தோடு இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.



இவ்வாறாக அனைத்து விஷயங்களும் மாஸான வகையில் இடம்பெற்றிருந்தாலும் இப்படம் ஆனது தோல்வியையே தழுவி இருக்கின்றது. விஜய்யின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த இந்த திரைப்படம் ஆனது சுமார் ரூ. 85 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement