• May 18 2024

பட வாய்ப்பிற்காக நம்ம பிந்து மாதவி என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா... இது தேவைதானா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஹோம்லியான லுக்கில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிந்து மாதவி. இவர் ‘பொக்கிஷம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'கே.டி.பில்லா கில்லாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 



இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கிலும் உள்நுழைந்து அங்கும் பல படங்களில் நடித்து வருகிறார்.  இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. எனினும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு படவாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அதன்பிறகு படவாய்ப்பு குறைந்ததால் விஜய் டீவியில் ஒளிப்பரப்பான 'பிக்பாஸ் சீசன் 3' இல் போட்டியாளராக பங்கேற்றார். 



இந்த நிகழ்ச்சியில் மூலம் கிடைத்த ரசிகர்களின் வரவேற்பையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து வரும் பிந்து மாதவி,  ’யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவனுக்கு அருள்வாய்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமன்றி சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னராக தேர்வானமை குறிப்பிடத்தக்கது. 



இந்நிலையில் மற்ற நடிகைளை போலவே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்ற பிந்து மாதவி சமீபகாலமாக கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றார். அந்தவகையில் தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 


ரசிகர்கள் மத்தியில் ஹோம்லி லுக்கில் அறிமுகமான நடிகை பிந்து மாதவி தற்போது சினிமா வாய்ப்புக்காகவே இவ்வாறு படு கவர்ச்சியான உடையணிந்து கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "என்னதான் இருந்தாலும் பட வாய்ப்பிற்காக இப்படியா பண்ணுவீங்க" என தமது பாணியில் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement