• May 04 2024

டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் -வெளியாகி 14 நாட்களில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகரான சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சர்வர் சுந்தரம், தில்லுக்குதுட்டு, டிக்கிலோனா, டகால்டி, A 1, பிஸ்கட் பாரிஸ் ஜெயராஜ், குலுகுலு, சபாபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஆனால் தற்போது இவர் நடித்துள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.சந்தானம், சுரபி முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது.


 இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தை ஆர்கே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கும்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. 

அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியான படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்று வருகிறது.இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாகி 14 நாட்களில் ரூ 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement