• Jan 19 2025

மறைந்த நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்திய அளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவிற்கு தொடர்ந்து ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

 கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவர் விஜயகாந்த். இருந்தபோதிலும் அவரது தேமுதிக கட்சி உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு நல்ல உடல்நிலையில் இருந்தபோது செய்த பணிகள் காரணமாக அமைந்துள்ளன.


அரசியலிலும் திறம்பட செயல்பட்ட விஜயகாந்த்,  உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவிலும் அரசியலில் இருந்தும் விலகியிருந்த விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் இன்று காலை இவர் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


விஜயகாந்த் பலருக்கும் அள்ளிக்கொடுத்த கர்ணன் ஆவார். அதே போல் இவரைபோல் சாப்பாடு போட்டு வயிறையும், மனசையும் யாராலும் நிரப்பவே முடியாது என்றும் கூறுவார்கள்.இப்படி பலருக்கும் அள்ளிக்கொடுத்த நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 53 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜயகாந்தின் வீட்டின் விலை மற்றும் ரூ. 1 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.



Advertisement

Advertisement