• Oct 30 2024

கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜயகாந்த் செய்ய மறுத்த முக்கிய விடயங்கள்- அடடே இதெல்லாம் இவர் பண்ணலையா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவர் விஜயகாந்த். இந்நிலையில்  உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 இன்று காலை இவர் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த்தின் மறைவை அடுத்து பலரும் சோகமடைந்துள்ளனர். மேலும் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோமே என்றும் கதறிக்கொண்டிருக்கின்றனர். 


இவர் சினிமாவில் அதிக சம்பளத்தை கொடுத்தால் கூட இந்த மாதிரி கதாபாத்திரங்கள் நடிக்கமாட்டேன் என்று சொன்ன கதாப்பாத்திரங்கள் குறித்து தற்பொழுது பார்க்கலாம்.

முதலாவதாக எவ்வளவு கோடி கொடுத்தாலும் மற்ற மொழி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தமிழில் மட்டும் நடித்து வெற்றி பெற்றவர்.அதே போல விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்றும் மறுத்து விட்டாராம்.மேலும் பிளேபாய் கேரக்டரிலும், பெண்களின் மரியாதையை தவறாக சித்தரிக்கும் படங்களிலும் நடிக்காதவராம்.


அத்துடன் சினிமாவில் அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாத ஒரே ஒரு ஹீரோ விஜயகாந்த் மட்டும்தான். இன்னும் சொல்லப்போனால் பல ஹீரோகளுக்கு பிரமோஷன் செய்து அவர்களை கை தூக்கி விட்ட பெருமையும் இவரை தான் சேரும். அந்த வகையில் சூர்யா மற்றும் விஜய்க்கு மிகப்பெரிய உதவியே பண்ணியிருக்கிறார். இவர்களுக்கு மட்டுமில்லாமல் இன்னும் எத்தனையோ சின்ன நடிகர்களுக்கு பக்கபலமாக இருந்து சப்போர்ட் பண்ணி இருக்கிறார். இப்படி இவரை பற்றிய நல்ல விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

Advertisement