• May 04 2024

லியோ திரைப்படம் இதுவரை தமிழ் நாட்டில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இப்படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், ஹரோல் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுனும், லியோ தாஸ் கதாபாத்திரத்தில் விஜய்யும் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு வாரமான போதும், இந்த படம் குறித்த செய்திகள், சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.

 லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தைப் போல இந்த படம் இல்லை என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கெடுத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.


முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் வரும் இதுவரை உலகளவில் மட்டுமே ரூ. 545 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படம் இதுவரை தமிழ் நாட்டில் மட்டுமே ரூ. 190 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement