• May 07 2024

அசராத வசூல் வேட்டையில் 'சந்திரமுகி-2'... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் ரஜினிக்கு 2005ஆம் ஆண்டு சிறந்த கம் பேக் கொடுத்த திரைப்படமும் சந்திரமுகி தான்.


இதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் (சந்திரமுகி-2) சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்தது. இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதுபோன்று நடிகர் வடிவேலு முதல் பாகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற இப்படமானது வெளியாகி 7 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த 7நாட்களிலும் மொத்தமாக உலக அளவில் ரூ.44.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement