• May 07 2024

முதல் நாளிலேயே மாஸ் காட்டிய 'சந்திரமுகி-2'... எத்தனை கோடி வசூல் தெரியுமா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினி ஜோதிகா பிரபு வடிவேலு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் வெளியாகி இருக்கின்றது.


ஆனால் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் கங்கனா ராணவத், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.


அந்தவகையில் இப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. படம் வெளியான நேரம் தொட்டு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருப்பதோடு பாசிட்டிவ் விமர்சனங்களும் அதிகம் கிடைத்து வருகின்றன. 


இந்நிலையில் இப்படத்தினுடைய முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் முதல் நாளில் மட்டுமே ரூ.7.5 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 4.5 கோடி வசூல் கிடைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வசூல் டபிள் மடங்காக அதிகரிக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement