• May 05 2024

பிக்பாஸ் மதுமிதாவா இது... இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் அதிகளவில் ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'பிக்பாஸ்' தான். இந்நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 6 ஆவது சீசன் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இவ் 6 சீசன்களிலும் ரசிகர்களால் மறக்க முடியாத சீசன்களில் ஒன்று சீசன் 5. இதில் ராஜு, பிரியங்கா, சிபி, இமான் அண்ணாச்சி, சிபி பாவனி உட்படப் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 


இவ்வாறான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தான் மதுமிதா. அதாவது ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழரான இவர் இந்த நிகழ்ச்சியில் 42 நாட்கள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமல்லாது தனது மழலை போன்ற குரலால் பல மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார். 


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ரசிகர்கள் குவிந்ததால் அவரது சமூக வலைதளங்களில் ஃபாலோயர்கள் அதிகமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் மதுமிதா தற்போதும் தனது தோழிகளுடன் இணைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்.

அதனோடு இணைந்து அவரின் சமீபத்திய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. 


இதனைப் பார்த்த ரசிகர்கள் "இருந்ததை விடவும் சற்று உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டீங்களே" எனக் கமெண்டுகள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement