• May 04 2024

வாரிசு படம் பற்றி நடன இயக்குனர் சொன்ன சூப்பர் அப்டேட்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66.இத் திரைப்படம் தெலுங்கில் ‘வரசுடு’ என்றும் , தமிழில் ‘வாரிசு’ என்றும், தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பல முக்கிய நட்ச்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் ஷூட் செய்யப்பட்டது. இதையடுத்து 2ம் கட்டமாக ஐதராபத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு மாத படப்பிடிப்பு முடிவடைந்தது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்றதாக தகவல் வெளியாகியது.

இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. ஹைதராபாத் சென்ற தளபதி விஜய், மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்தரசேகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவி வந்தன.

மேலும் இப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது என்பதனை விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 2ம் தேதி துவங்கி, சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது

இவ்வாறுஇருக்கையில் கடந்த சில நாட்களாக ‘தளபதி 66’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது சஸ்பென்சாக படக்குழு வைத்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 21ம் மாலை 6.01 மணிக்கு ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட போவதாக அறிவிப்பு வெளியானது.

அதன்படி, தளபதி பிறந்தநாள் அன்று, இப்படத்தின் 3 போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியானது.மேலும் தளபதி விஜய் கோட் சூட் போட்டு செம ஸ்டைலாக அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். The Boss Returns என படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அத்தோடு இப் படத்தின் 2வது லுக்கில், காய்கறி வண்டியில் விஜய் மேலே படுத்திருப்பது போலவும் அருகில் குழந்தைகள் சிலர் அமர்ந்திருப்பது போலவும், 3வது லுக்கில் பைக் மேலே செம ஸ்டைலிஷாக விஜய் அமர்ந்திருப்பது போல போஸ்டர் வெளியானது.

வாரிசு படத்திற்கு நடன இயக்குனர்களாக ஷோபி & ராஜூ சுந்தரம் பணிபுரிகின்றனர். இந்நிலையில், பிரபல ஆன்லைன் சேனலுக்கு பிரத்யேகமான தகவலை ஷோபி மாஸ்டர் பகிர்ந்துள்ளார். அதில், வாரிசு படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், இன்னொரு பாடல் காட்சிக்கான முன் காட்சி எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். எந்த பாடல்கள் என்று தற்போது வெளியில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement