• May 07 2024

வாணிபோஜன் நடிக்கும் "கேசினோ"… ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் விக்கி

tech / 1 year ago

Advertisement

Listen News!

தெய்வ மகள் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன்
இந்த சீரியல் மூலம் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்தன.

அந்தவகையில் அவர் முதலாவதாக நடித்த படம் ஓ மை கடவுளே . இப்படத்தில் இவர் நடித்த மீரா கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கவரப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து லாப் அப், இராம ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த வாணி பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு தாழ் திறவா, லவ், ஊர்குருவி, ரேக்ளா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில் இயக்குநர் மார்க் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணிபூஜன் நடித்திருக்கும் திரைப்படம் "கேசினோ". தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்தவகையில் படத்தின் போஸ்ட்டரை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் திரைப்படம் ஓரிரவில் ஒரு கட்டடத்துக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி பரபரப்பான த்ரில்லராக உருவாகி உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைத்துள்ளனர் படக்குழுவினர். ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தைத் தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த புதுமையான பர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் இப்படம் முழுக்க முழுக்க கோயம்புத்தூரில் இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70% ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க வாணிபோஜன் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், எருமசாணி, அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement