• Mar 28 2023

எஞ்சாய் எஞ்சாமி பாடகரால் வந்த சண்டை.. 'சர்ப்பாட்டா 2' விலிருந்து சந்தோஷ் நாராயணனை அதிரடியாகத் தூக்கிய இயக்குநர்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

பா.இரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான படம் 'சார்பட்டா'. துஷாரா விஜயன், பசுபதி, ஜான் கொகேன், சந்தோஷ் பிரதாப், ஜி.எம்.சுந்தர், சஞ்சனா, ஜான் விஜய் எனப் பலர் நடித்திருந்த இப்படமானது 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. 


குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். மேலும் இப்படத்தின் வெற்றிக்கு சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான் முக்கிய பங்காற்றி இருந்தன. 

சுமார் 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வந்த பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி  2021-ஆம் ஆண்டு முறிவை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலம் அறிவு - சந்தோஷ் நாராயணன் இடையே ஏற்பட்ட மோதல் தான்.


இந்நிலையில் பா.ரஞ்சித் நேற்று திடீரென சார்பட்டா படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதில் முதல் பாகத்தில் பணியாற்றிய பிரபலங்கள் இதில் பணியாற்றுவதாக குறிப்பிட்டு இருந்தாலும், சந்தோஷ் நாராயணனின் பெயரை மட்டும் அவர் குறிப்பிடவில்லை.


இதனையடுத்து சார்பட்டா 2 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்பதை ரசிகர்கள் உறுதி செய்து விட்டார்கள். சந்தோஷ் நாராயணன் இல்லாத சார்பட்டா 2 வெற்றி பெறுமா என்பது தான் நெட்டிசன்களின் தற்போதைய குமுறலாக உள்ளது. 


குறிப்பாக சார்பட்டா முதல் பாகத்திற்கு முதுகெலும்பாக இருந்ததே சந்தோஷ் நாராயணனின் இசை தான், அந்த இசை 2-ம் பாகத்தில் இடம்பெறாது என்பதை அறிந்த நெட்டிசன்கள் பலரும்  அவரையே இப்படத்திற்கும் பணியாற்ற வைக்குமாறு பா.இரஞ்சித்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement