• Sep 17 2024

திடீரென புதிய அவதாரம் எடுக்கும் இயக்குநர் மிஸ்கின்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நரேன் நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என வித்தியாசமான கதை அம்சங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார்.

இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு திரைப்படம் உருவாகி வருகின்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். மற்றும் விஜய்சேதுபதி பூர்ணா சந்தோஷ் பிரதப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அந்த வகையில் மிஷ்கினின் படங்கள் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும் அது இளையராஜா இசை அமைத்ததாக இருந்தாலும் சரி அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி அந்த அளவுக்கு ஈடுபாடு கொண்டவர் மிஸ்கின்.

இந்நிலையில், மிஸ்கின் தனது சகோதரன் ஆதித்யா இயக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார். இந்த படத்துக்கு "டெவில்"என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கின்றார். இப்படத்தில் விதார்த் பூர்ணா மற்றும் ஆதித் நடிக்கின்றனர் முக்கிய வேடத்தில் இயக்குநர் மிஸ்கின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement