• Apr 27 2024

சிவகார்த்திகேயனுடன் மோதவுள்ள இயக்குநர் மிஷ்கின்- வெளியாகிய புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக பிரின்ஸ் என்னும் திரைப்படம் வெளியாகியது. இருப்பினும் அது கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.

இதனை அடுத்து இவர் நடித்து வரும் திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தினை 'மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகின்றார்.  இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.


இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் மிஷ்கின் இருவருக்குமான காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் எஸ் கே ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement