• Mar 29 2024

இயக்குநர் பேரரசுக்கு அந்த விருதை அறிவித்த நித்தியானந்தா- ஏன் கொடுத்தார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பல நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கிய சாமியாராக இருப்பவர் தான் நித்தியானந்தா.இவருக்கு எதிராக பல ஆதாரங்கள் வெளியாகி புகார்கள் கொடுக்கப்பட்டதால் தனி தீவு ஒன்றை வாங்கி அங்கேயே குடியேறியதாக அறிவித்தார். கைலாசா என்று அந்த தீவுக்கு பெயர் வைத்தது மட்டும் இன்றி, கைலாசாவிற்கு நான் தான் அதிபர் என கூறி, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று உருவாக்கி உள்ளதாகவும் கூறினார்.

இதனை அடுத்து  நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவித்திருந்தார்.


இதில்  தர்ம ரட்சகர் விருது இயக்குநர் பேரரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நித்யானந்தா கூறுகையில், "உங்களுடைய இந்து மதப்பற்றும் இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும் களம் காணுவதும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரும் பணிகளை நன்கு அறிவேன்.


உங்களுடைய எல்லா திரைப்படத்தின் தலைப்புகளுமே ஆன்மிக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும். உங்களுடைய இந்து மதப்பணி மிகப்பெரிய பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றும் தோல் கொடுத்து நிற்பேன். நானும் கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மதப் பணிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்." என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் இயக்குநர் பேரரசுவுக்கு, நித்தியானந்தா வழங்கியுள்ள 'கைலாச தர்ம ரட்சகா விருது' குறித்த சான்றிதழ் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது .



Advertisement

Advertisement

Advertisement