• Sep 13 2024

இயக்குநர் பாலா முன்னாடி எட்டி உதைச்ச நடிகர் அஜித்- முழுக்கதையைக் கேட்டதும் ஒரு குற்றமா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் அஜித் குமார். இவரது நடிப்பில் வௌியாகிய விடாமுயற்சி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது விடாமுயற்சி படத்திற்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகின்றார்.மகிழ்திருமேனி இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு  துபாயில் நடத்தப் போவதாக படக்குழு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாகவும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது ஒரு புறம் இருக்க அஜித் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித். அந்த நேரத்தில் அஜித் 6 கோடி வரை சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்தாராம். பாலா படம் என்றதும் தனது சம்பளத்தை 2 கோடியாக குறைத்துக் கொண்டாராம். அவருக்கு அட்வான்ஸாக ஒரு தொகையை பாலாவும் மதுரை அன்புவிடம் இருந்து வாங்கி கொடுத்தாராம்.

இந்தப் படத்திற்காக அஜித் மிகவும் நீண்ட தலைமுடியுடன் உடம்பையும் குறைத்துக் கொண்டு இரண்டு மாதமாக காத்துக் கொண்டிருந்தாராம். பாலாவை பொறுத்தவரைக்கும் முழு கதையையும் சொல்லமாட்டாராம். ஒன்  லைன் மட்டும் தான் சொல்வாராம்.


இப்படி நாள்கள் நீண்டு  கொண்டே போக பாலாவிடம் கதையை கேட்டிருக்கிறார் அஜித். உடனே பாலா என்னிடமே கதையை கேட்கிறாயா? என்ற கோபத்தில் கொடுத்த அட்வான்ஸை வட்டியுடன் கொடுக்கும் படி கறாரா கேட்டாராம்.ஆனால் அஜித் வாங்கிய அட்வான்ஸை வேண்டுமென்றால் கொடுத்து விடுகிறேன். ஆனால் வட்டி எல்லாம் தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார்.

 இப்படி பேச்சு இழுத்து கொண்டே போக கோபத்தில் அஜித் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைச்சு எழுந்து போய்விட்டாராம். அதன் பிறகு வெளியே பணத்தை ஏற்பாடு செய்து பாலாவிடம் பணத்தை கொடுத்தாராம் அஜித். இந்த செய்தியை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement