• Sep 27 2023

வசமாக சிக்கிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா...அப்போ லிவிங் ரிலேஷன்ஷிப் உண்மை தானா?

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

ஒரு படத்தில் சேர்ந்து நடித்து விட்டாலே சில ஜோடிகளுக்கு நிஜ வாழ்க்கையிலும் கெமிஸ்ட்ரி வந்திடும்  அப்படி எத்தனையோ நட்சத்திரங்கள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர். அப்படித்தான் தற்போது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரின் திருமணத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


ஆனால் சிக்குவோமா நாங்க என்ற ரீதியில் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் அதை வெளியில் சொல்லாமல் போக்கு காட்டி வருகின்றனர். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இவர்களின் புட்டு வெளிப்பட்டு விடுகிறது. அப்படித்தான் தற்போது இவர்களுடைய காதல் அம்பலமாகியுள்ளது.


அதாவது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் அதற்கான ஆதாரத்தையும் நெட்டிசன்கள் போட்டோவோடு வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே மாலத்தீவு சென்றபோது இவர்கள் இருவரும் மீடியாவில் வசமாக சிக்கினார்கள்.


ஆனாலும் ரசிகர்கள் வசமா மாட்டிகிட்டியே ராசா என்று இந்த ஜோடியை கிண்டலடித்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் தேவரகொண்டா தன் சோசியல் மீடியா பக்கத்தில் இரு கைகள் இணைந்திருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டு விரைவில் அறிவிக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இப்படி ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.எப்போது இருவரும் தங்களின் திருமணத்தை அறிவிக்க போகிறார்கள் என பொறுத்திருந்த்து பார்ப்போம்.



Advertisement

Advertisement

Advertisement