• Oct 21 2026

நடிப்பைத் தாண்டி ரித்விக் எடுத்த புதிய முயற்சி.! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் ரித்விக், தான் நடிப்புத் துறையில் மட்டுமல்லாமல் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் ஆர்வம் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தனிப்பட்ட முயற்சி மற்றும் படிப்பின் முக்கியத்துவம் குறித்து பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

அந்தப் பேட்டியில் பேசிய ரித்விக், தான் பெரிய அளவிலான மென்பொருள் நிறுவனம் எதையும் தொடங்கவில்லை என்றும், தனது நண்பருடன் இணைந்து ஒரு இணையதளத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த இணையதளத்தில் ரோபோட்டிக்ஸ் தொடர்பான பாடநெறிகளை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இதுவரை அந்தப் பாடநெறிகளில் யாரும் இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முயற்சிக்கான பணிகளைத் தனது ஓய்வு நேரங்களில் மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது தனது முதன்மையான கவனம் படிப்பின் மீதே இருப்பதாகவும் ரித்விக் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறிப்பாக, திரைப்படப் படப்பிடிப்புகளுக்குச் செல்லும்போதுகூட பள்ளிப் புத்தகங்களை எடுத்துச் செல்வதாக அவர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில், கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் ரித்விக்கின் இந்த அணுகுமுறை பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

நடிப்பு, கல்வி, தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டும் ரித்விக்கின் இந்த முயற்சி குறித்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement