• May 04 2024

போஸ்டர் மட்டும் காப்பி அடித்தார்களா?அல்லது படத்தில் காட்சிகளையும் காப்பி எடுத்தார்களா?-எஸ். கே20 படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் .மெரினா திரைப்படத்தின் தன் திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த டான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில் எஸ்கே தனது 20-வது படத்தை நடித்து வருகின்றார்

இதனுடைய ஃபர்ஸ்ட் லுக் நேற்று வந்தநிலையில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. உலக வரைபடத்தின் பின்னணியுடன் கையில் உலக உருண்டையை வைத்து கொண்டு அமர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் கீழே தேசியக்கொடிகள் ஓவியங்களால் பூசப்பட்ட கைகள் என முதல்பார்வை போஸ்டர் இடம்பெற்றது.

போஸ்டருக்கான வரவேற்பு கிடைத்தாலும்,இந்த போஸ்டர் பின்னணியில் உள்ள உலக வரைபடம் கீழே உள்ள கைகள் இரண்டுமே காப்பியடிக்கப்பட்டது. இப்படி ஒரு காப்பி போஸ்டர் தமிழ் சினிமாவில் வருவது முதல் முறையல்ல இதற்கு முன்பும் பல படைப்புகள் வெளிவந்துள்ளன.

இந்த போஸ்டரை வடிவமைத்த டிசைனர் அதற்கு அங்கீகாரம் அளித்த இயக்குநர் ஆகியோர் தான் இதற்கு பொறுப்பு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் போஸ்டர் மட்டும் காப்பி அடித்தார்களா? அல்லது படத்தில் உள்ள காட்சிகளை எல்லாம் காப்பி எடுத்தார்களா என்பது படம் வந்த பின்னரே அறிய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement